நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. ஜூன் 4ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட்டது . இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள், தில்லுமுல்லுகள் நடந்தது அம்பலமானது. இது தொடர்பாக பலர் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளனர். கருணை மார்க் பெற்றவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மறுநாள் இந்தியா முழுவதும் மாநில தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.