அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஷிலாதித்யா சேத்தியா. ஐ பி எஸ் அதிகாரியான இவர் அசாமின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகபணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் தலைநகர் கவுகாத்தியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஷிலாதித்யா சேத்தியா பதறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். அங்கு அவர் தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். அங்கிருந்தவர்கள் ஷிலாதித்யா சேத்தியாவுக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றினர். ஆனாலும் தனது மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஷிலாதித்யா சேத்தியா துப்பாக்கியால் தன்னே தானே சுட்டுக்கொண்டார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ஷிலாதித்யா சேத்தியா தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனைவி மீது உயிரையே வைத்திருந்த அந்த அதிகாரியின் முடிவு சிலருக்கு சரியான முடிவு இல்லை என்று தோன்றினாலும் அவரைப்பொறுத்தவரை மனைவி தான் உயிராய் இருந்திருக்கிறாா் என்பதை நிரூபித்து வி்ட்டார் என அவருடன் பணியாற்றிய மற்ற அதிகாரிகள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.