மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடியும் முன்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மராட்டியம் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகி வருகிறது. சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கார்கே, ராகுல் இருவரும் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
வரும் 24-ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பான காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெறும் என காங்.பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். வரும் 24ம் தேதி ஜார்க்கண்ட் மாநில நிர்வாகிகளுடன் கார்கே, ராகுல் ஆலோசனை நடத்துகின்றனர். 25ம் தேதி மராட்டிய மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கார்கே, ராகுல் ஆலோசனை நடத்துகின்றனர். 26ம் தேதி அரியானா, 27ம் தேதி காஷ்மீர் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகின்றனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு ஏற்கனவே பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியும் ஆயத்தமாகிறது.