Skip to content
Home » திருச்சி… கார் மோதி தாய், மகன் பரிதாப சாவு

திருச்சி… கார் மோதி தாய், மகன் பரிதாப சாவு

  • by Senthil

திருச்சி பெட்டவாய்த்தலை சக்தி நகரை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் – இதே பகுதியில் சவுக்கு மற்றும் விறகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி பர்வீன்(30). மகன் அப்சல் முகமது(10). மகள் பரிதா. பர்வீன் நேற்றுமுன் தினம் இரவு மகனுடன் மரக்கடைக்கு சென்று இஸ்மாயிலிடம் பணம் வாங்கிக்கொண்டு பக்ரீத் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க கடைவீதிக்கு நடந்து சென்றுகொண்டி ருந்தார். அப்போது அவர்கள் பெட்டவாய்த்தலை அருகே சாலையை கடக்க முயன்றபோது திருச்சியிலிருந்து  கரூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் படுகாயமடைந்த பர்வீன், அப்சல் முகமது அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து வந்த பெட்டவாய்த்தலை போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!