மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக வந்து மோதியது. இந்த விபத்தில் 15 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரயில் விபத்தில் 5 பெட்டிகள் தடம்புரண்டு பலத்த சேதமடைந்துள்ளன.. விபத்து நடந்த இடத்துக்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் விரைந்துஉள்ளார். விபத்து நடந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்லைவர் கார்கே ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.