திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரம்மாள் (55)இவரது மகன் மணிகண்டன் (27 ). பொறியியல் பட்டதாரி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது தகராறு ஏற்பட்டதாகவும் இந்த நிலையில் கடந்த 12ம் தேதி மாலை மணிகண்டன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது வழியில் பைக்கை நிறுத்தி அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் தமிழ்ச்செல்வன், துவாக்குடி பாரதிதாசன் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் சப்பை (எ) பகத்சிங், மேட்டு தெரு அம்பேத்கர் நகரை சேர்ந்த சஞ்சய், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சுமன் ஆகிய 4 பேரும் மணிகண்டனின் கால் கை மூக்கு ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து வீரம்மாள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடிப் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் தேடி வந்தனர் இந்நிலையில் அவர்கள் நான்கு பேரும் இன்ஸ்டாகிராமில் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து போஸ்டர் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த துவாக்குடி நகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்குமார் அம முக நிர்வாகி மாரியப்பன் அந்த பகுதியைச் சேர்ந்த பாலவீரன் ஜோசப் உட்படஅந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
துவாக்குடி போலீசார் செந்தில்குமார், மாரியப்பன் ,பாலவீரன் ஜோசப் உட்பட 14 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 19 பேர் மீது துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.