மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக வந்து மோதியது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். ரயில் விபத்தில் 5 பெட்டிகள் தடம்புரண்டு பலத்த சேதமடைந்துள்ளன.. விபத்து நடந்த இடத்துக்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் விரைகிறார். விபத்து நடந்த இடத்தி்ல் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.