Skip to content
Home » பக்ரீத் பண்டிகை…. களை கட்டிய ஆட்டுச் சந்தை… ஏமாற்றம் அடைந்த ஆட்டு உரிமையாளர்கள்…

பக்ரீத் பண்டிகை…. களை கட்டிய ஆட்டுச் சந்தை… ஏமாற்றம் அடைந்த ஆட்டு உரிமையாளர்கள்…

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆட்டுச் சந்தையில் முகாமிட்டு, தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்று பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவார்கள். அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதி  குறுக்கு ரோடு ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான ஆடுகள் சந்தைக்கு இன்று கொண்டுவரப்பட்டன. தேனி, கம்பம்,தஞ்சாவூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளின் உரிமையாளர்களும், வியாபாரிகளும் ஆயிரக்கணக்கான ஆடுகளுடன் வந்திருந்தனர். 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஆடுகள்  விற்பனை செய்யப்பட்டது. இதில் செம்மறியாடு, நாட்டு வெள்ளாடு, கருப்பு ஆடு, ஆந்திர ஆடு, பல்லு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரகங்களில்  இங்கு கிடைக்கும் என்பதால் இஸ்லாமியர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிக் கொண்டு வாகனத்தில் கொண்டு சென்றனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் சரியான விலையில் ஆடுகள் கிடைத்ததாக இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். வழக்கமாக இந்த ஆட்டுச் சந்தையில் 2 ½ கோடியில் இருந்து மூன்று கோடி வரை ஆடுகள் விற்பனையாகும் நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறையும் என்று ஆடுகளை ஓட்டி வந்த உரிமையாளர்களும் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கு காரணம் கடந்த ஒரு வாரமாக பல இடங்களிலும் நடைபெற்ற ஆட்டு சந்தைகளில் வியாபாரம் முடிந்த நிலையில் பக்ரீத்திற்கு முதல் நாள் நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் குறைந்த அளவே வியாபாரிகள் கொள்முதலுக்கு வந்துள்ளதால் நல்ல வியாபாரம் நடைபெறும் என்று ஆடுகளை ஓட்டி வந்துள்ள தங்களுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் ஆடுகளை திரும்பவும் வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டி உள்ளது என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *