தஞ்சாவூரில் இருந்து திருமானூர் திருமழபாடி மார்க்கமாக திருச்சி வரையில் ஸ்ரீ பாலாஜி என்ற தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி இன்று காலை சென்ற ஸ்ரீ பாலாஜி பஸ் அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள புதுக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு சிறிது தூரம் சென்ற போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி, வயல் பகுதியில் இறங்கியது. இதனால் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது. எனினும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. பஸ் மின் கம்பத்தில் மோதி நின்று இருந்தால் மின் கம்பி அறுந்து பஸ்சில் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். இந்த விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. கடந்த ஒரு வாரத்தில் பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து நடப்பது இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் ராயபுரம் அருகே அரசு பேருந்து முன் கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் இன்றி 12 பேர் மட்டும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
