கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் மாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று அமராவதி ஆற்றில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அமராவதி ஆற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடத்தை மேள தாளங்கள் வானவேடிக்கை முழங்க தலையில் சுமந்தவாறு முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தனர். பிறகு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் மாரியம்மன் ஆலயம் வந்தடைந்தனர். அதைத் தொடர்ந்து மாரியம்மன் மற்றும் மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தான்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகர் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் மாரியம்மன் திருவிழாவில் ஒரு பகுதியாக தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.