Skip to content
Home » பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

  • by Senthil

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்த அறிவுக்கரசு. இவரது மனைவி சுமதி.  இவர் தனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி உள்ளார். கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது ஊருக்கு செல்ல பேருந்துக்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தார். அப்போது சுமதியை ஒரு சில மர்ம நபர்கள் தவறாக பேசி அழைத்துள்ளனர். மது போதையில் இருக்கும் நபர்களை தாக்கினால் பிரச்சனை ஏற்படும் என்று கூறி பேருந்து நடத்துனர் போலீசாரிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையத்தில் புகார் அளிப்பதற்காக போலீசாரை தேடி அலைந்துள்ளார். ரோந்து வாகனத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவதிக்குள்ளாகி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து காவல் உதவி மையம் 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்த நிலையில் சிறிது நேரம் கழித்து அப்பகுதிக்கு போலீசார் வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் ஒரு போலீசார் கூட இல்லாததால் புகார் தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்து சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்தில் அவரது ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் கரூர் பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!