திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருப்பவர் சௌந்தரபாண்டியன். கடந்த ஒரு ஆண்டுகாலத்திற்கும் மேலாக மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக அமைச்சர்கள் தலைமையில் லால்குடி தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. காரணம் அவரை அதிகாரிகள் அழைப்பு இல்லை என கூறப்படுகிறது. திருச்சியின் சீனியர் அமைச்சரான நேருவின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் அவருக்கு கூட அழைப்பு இல்லையா? என பலரும் அதிகாரிகளிடம் கேட்டால் ஆமாம் அழைக்க வேண்டாம் என்கிற மேலிட உத்தரவின் அழைப்பு இல்லை குறிஎன்கின்றனர் அதிகாரிகள். இத்தகைய சூழ்நிலையில் நேற்றைய தினம் லால்குடியில் புதியதாக கட்டப்படும் தாசில்தார் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றின் பணிகளை அமைச்சர் நேரு, மாவட்டக்கலெக்டர் பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். வழக்கம் போல் சொநஇது தொடர்பான படங்கள் மற்றும் செய்திகள் அமைச்சர் நேருவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அந்த பதிவின் கீழ் உள்ள கமெண்ட் பகுதியில் போடப்பட்டிருந்த ஒரு கமெண்ட் தான் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பதிவின் கீழ் செளந்தரபாண்டியன் என்கிற பெயரில் உள்ள பேஸ்புக் ஐடியில் இருந்து ” லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது” என கமெண்ட் பதிவிடப்பட்டிருப்பது தான். கமெண்ட் போட்ட அந்த சௌந்தரபாண்டியன் பெயரிலான ஐடி லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியனின் அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கமாகும். ஏன் இப்படி பதிவு என எம்எல்ஏ தரப்பில்கேட்டதற்கு கடந்த சில மாதங்களாகவே அதிகாரிகளால் லால்குடி எம்எல்ஏ தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். அவரது தொகுதிக்குயில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. நேற்றைய தினமும் அப்படி தான்.. மன வெறுத்து போய் தான் எம்எல்ஏ இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் என்கின்றனர். லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்இந்த பேஸ்புக் பதிவு திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் வைரலாகி வருகிறது..