Skip to content
Home » கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது

கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது

  • by Authour

குவைத்தில் நடந்த தீ விபத்தில் 49 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். கேரளாவை சேர்ந்த 24 பேரும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரும்  பலியானார்கள். அவர்களது உடல் இன்று காலை  குவைத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.  அங்கிருந்து உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வர  அமைச்சர் மஸ்தான் மற்றும் அதிகாரிகள்  கொச்சி சென்றிருந்தனர். உடல்கள் வந்ததும் அதில் 7 தமிழர்களின் உடல்களையும் தமிழகத்தில் அவர்களின் சொந்த ஊர்களான திருச்சி, பேராவூரணி, ராமநாதபுரம் உள்பட  அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

பகல் 12 மணிக்கு உடல்கள் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸ் தமிழகம் நோக்கி புறப்பட்டது. இன்று இரவு 8 மணி அளவில்  ஆம்புலன்ஸ் திருச்சி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *