Skip to content
Home » விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…… எடப்பாடி பேட்டி

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…… எடப்பாடி பேட்டி

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக  வாக்கு 2019 நடந்த தேர்தலை விட 1 சதவீதம் அதிகரித்திருக்கிறதுஅதேபோல் திமுகவிற்க்கு கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.ஊடகங்கள் அதிமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது.

திமுகவில் ஸ்டாலின் ,உதயநிதி மற்றும் அமைச்சர்கள் என அதிகாரத்தை பயன்படுத்தி பலரும் வாக்கு சேகரித்தார்கள்.அதேபோல் ராகுல் காந்தி ,திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் பிரசாரம் செய்தார்கள்.

அதேபோல் பாஜகவில் பலமுறை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.மேலும் அந்த கட்சியின் மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் பிரசாரம் செய்தனர்..இதற்கு மத்தியில் தான் அதிமுகவின் 1 சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது. ஆனால் இது சட்டமன்ற தேர்தல் அல்ல. மத்தியில் யார் வர வேண்டும் என்கிற தேர்தல். 2026  சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும்..

தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் அவர்களுக்கு வாக்கு ஒரளவிற்க்கு வந்ததது.சட்டமன்ற தேர்தலையும் ,நாடாளுமன்ற தேர்தலையும் மக்கள் பிரித்து பார்க்கிறார்கள்.அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களால் தான் ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளது.

பிரிந்து சென்றவர்களால் அதிமுகவிற்கு எந்த இழப்பும் கிடையாதுநீதிமன்றம் செல்பவர்கள் ,போறவங்க வர்றவங்க எல்லாம் ஒன்றிணைந்து குழு ஆரம்பித்தால் அது என்ன குழுவா..?அதெல்லாம் ஒரு குழுவா..

ஊடகங்கள் தான் அவர்களை பெரிதாக்குகிறார்கள்..விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படும்..

2014 ல்  கோவை மக்களவை தேர்தலில் திமுக 3 வது இடத்திற்கு வந்தது. அப்போது இரண்டாம் இடத்தில் சிபிஆர் வந்தார்.

மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

1.75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் 2019ல் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.அதன் பின்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலி்ல் அதிமுக வெற்றி பெற்றது. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்ததால் திமுகவிற்கு இந்த தேர்தலில் வாக்கு கிடைத்ததுஎங்ளை போல தனியாக நின்று இருந்தால் வாக்கு கிடைத்து இருக்காது

மேற்கு மண்டலம் திமுக கோட்டை என கற்பனையாக நினைத்து கொண்டு இருக்கின்றனர்.2019 நாடாளுமன்ற தேர்தலில் 1.76 லட்சம் வாக்குகள் சிபிஎம் வேட்பாளர் பெற்றார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக வெற்றி பெற்றது. அதிமுகவில் இருந்து சிலர் பிரிந்த சென்றதால் கூடுதலாக ஓட்டு வாங்கி இருக்கிறோம். கட்சி பலமாக இருக்கிறது.  என்னை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!