Skip to content
Home » தமிழ் நடிகர் திடீர் மரணம்…. அனாதையாக கிடந்த சடலம்

தமிழ் நடிகர் திடீர் மரணம்…. அனாதையாக கிடந்த சடலம்

கடந்த 2013 -ம் ஆண்டு, நடிகர் மிர்ச்சி சிவா – வசுந்தரா காஷியாப் நடிப்பில், கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தின் மூலம்நடிகராக அறிமுகமானவர் பிரதீப் கே விஜயன். ‘தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’, ‘லிப்ட்’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். வில்லன், நகைச்சவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை  பாலவாகத்தில் வசித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன், கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்றும் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அது தோல்வியிலேயே முடிந்தது. போலீஸ் உதவியுடன் அங்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  விஜயன் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பில் இறந்திருக்கலாம்  என கூறப்படுகிறது.  பிரதீப் இன்னும் திருமணம் செய்து  கொள்ளவில்லை. குளியலறையில் தலையில் காயங்களுடன்  அவர் இறந்து கிடந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!