தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் நேற்று 24 வது பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம் பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மாணவ, மாணவிகள் 1469 பேரும், முதுகலை வகுப்பில் 379 மாணவ மாணவிகளும் பட்டம் பெற்றனர். மொத்தம் 1848 மாணவ, மாணவிகள் பட்டத்தை பெற்றனர். இதில் 162 மாணவ, மாணவிகள் பதக்கங்கள் பெற்றனர். இவர்களை சிறப்பு விருந்தினர் பாராட்டி பதக்கங்கள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/graduate-tnj-930x576.jpg)