Skip to content
Home » பொள்ளாச்சி மாட்டுசந்தை… ரூ.3 கோடி விற்பனை…

பொள்ளாச்சி மாட்டுசந்தை… ரூ.3 கோடி விற்பனை…

  • by Senthil

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.

சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வரும். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் இரண்டு கோடி ருபாய் அளவிற்கே வர்த்தகம் நடைபெற்று வந்தது. தற்போது 17ம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தை களை கட்டி இருந்தது.

வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில்  இருந்து 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர். இதனால் காலை முதலே சந்தை களை கட்டி உள்ளது.  கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால்  இன்று மூன்று கோடி வர்த்தகம் நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!