நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குளறுபடிகள் ஏற்பட்டது. 1563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதனால் இவர்கள் முதலிடம் பிடித்தனர். இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். அவர்கள் மீண்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் என கோரினர்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. நீட் தேர்வில் குளறுபடி என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 வாரத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறு தேர்வு ஜூன் 23ம் தேதி நடத்தப்பட்டு 30ம் தேதி ரிசல்ட் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.