பாஜக தேசி்ய தலைவராக இருந்த நட்டா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவரது பதவி காலமும் முடிவடைந்து விட்டதால், பாஜக தேசிய தலைவர் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது எம்.பியாக தேர்வுவாகி உள்ளவரும், 17வது மக்களவையின் தலைவராக பணியாற்றியவருமான ஓம்பிர்லாவை பாஜக தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இவர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டவர்களை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்ததால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில் அமைச்சர் பதவி கிடைக்வில்லை எனவே பாஜக தலைவராகலாம் என கூறப்படுகிறது.
அடுத்ததாக ஒருபிரிவினர் பெண் ஒருவரை தலைவராக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். இவர்கள் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ஸ்ம்ருதி இரானியை மனதில் வைத்தே இப்படி கூறுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.