Skip to content
Home » தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

தமிழிசை-அண்ணாமலை மோதல்….. அறிக்கை கேட்டது பாஜக மேலிடம்

  • by Senthil

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை கோஷ்டி, தமிழிசை கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் செயல்படுகிறது. இதில்  பெரும்பாலான நிர்வாகிகள் தமிழிசை பக்கமே இருக்கிறார்கள். அண்ணாமலை ஒருசில நபர்களை வைத்துக்கொண்டு  உண்மையான கட்சிக்காரர்களை மிரட்டுகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். வார் ரூம் என ஒன்றை வைத்துக்கொண்டு அதில் பணியாற்றுகிறவர்கள்  பலரை மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என  அந்த கட்சியை சேர்ந்த  கல்யாணராமன்  குற்றச்சாட்டை வைக்கிறார்.  இதனால் அண்ணாமலை மீது பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் உள்ளது.

அதே நேரத்தில் பிரதமர் மோடியிடம் அண்ணாமலைக்கு நல்ல பெயர் இருப்பதால்,  அவரை  பதவியில் இருந்து தூக்கமுடியவில்லை.  இந்த நிலையில் வழக்கம் போல மக்களவை தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் தோல்வியை சந்தி்த்தது. ஆனாலும் அண்ணாமலை அதிக ஓட்டு வாங்கிவிட்டோம் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க.வில் அண்ணாமலை மற்றும் தமிழிசை தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளார். தேர்தல் தோல்விக்கு அண்ணாமலையின் செயல்பாடுகளே காரணம் என்று நிர்வாகிகள் புகார் கூறி வந்தனர். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தமிழிசை கூறிய நிலையில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது

கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணாமலை பா.ஜ.க.வில் பதவி அளித்ததையும் தமிழிசை விமர்சித்திருந்தார். அண்ணாமலையின் செயல்பாடுகள் மற்றும் மற்ற நிர்வாகிகளுடன் அவர் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவரம் கேட்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் பலர் தான் சொல்வதை கேட்கவில்லை என்று அண்ணாமலை மேலிடத்தில் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தனக்கு  தரவேண்டும். நான் சொல்வதற்கு  போட்டியாக யாரும் பதில் கருத்து கூறக்கூடாது எ ன சிலருக்கு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில்  தமிழகத்தில் வெற்றி பெற முடியாது.  என்றும்  பாஜக மேலிடத்தில் அண்ணாமலை கூறி் விட்டாராம்.  அதாவது 2026 தோல்விக்கு இப்போதே அவர்  காரணத்தை கண்டுபிடித்து விட்டார் என  எதிர் கோஷ்டியினர் அண்ணாமலையை விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!