18வது மக்களளவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ)பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணி அரசு பதவியேற்றது.
இந்த சூழலில் வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். .. முதல் இரு நாட்கள் புதிய எம்பிக்களின் பதவியேற்பு விழா நடைபெறும்.
பாஜக மூத்த தலைவர் ராதா மோகன் சிங் மக்களவையின் தற்காலிக தலைவராக இருந்து புதிய எம்பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
மூன்றாவது நாளில் மக்களவைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். அநேகமாக ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி புதிய சபாநாயகா் ஆகலாம் என்று தெரிகிறது. ஜூன் 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை யாற்றுவார். புதிய அரசு பதவியேற்றுள்ள சூழலில் ஜூலை 3-ம் தேதி வரை கூட்டம் நடைபெறும்.