புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, புதுகை ராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆதார் எண் புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டுப்புத்தகங்களை வழங்கி, நன்றாக படிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிழ்ச்சிக்கு வந்த கலெக்டரை முதன்மை கல்வி அதிகாரி சண்முகம் மற்றும் தலைமை ஆசிரியை , ஆசிரியைகள் வரவேற்றனர். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.