Skip to content
Home » அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – கும்பகோணம் சாலை, சிலால் மெயின் ரோடு சாலை ஓரமாக இரு சக்கர வாகனத்தில் வந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் விழுந்து கிடந்தார். இதை அந்த பக்கம் சென்றவர்கள் பார்த்து, தா .பழூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 108 ஆம்புலன்ஸ்சை வரவழைத்தனர். 108 ஆம்புலன்ஸில் வந்தவர்கள் அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்தவரின் இருசக்கர வாகனத்தின் முன்பாக ஒக்கநத்தம் கொளஞ்சிநாதன் என எழுதி உள்ளதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பூண்டு வியாபாரியான கொளஞ்சிநாதன் என்பதும், இவருக்கு ஏற்கனவே நெஞ்சு வலி இருப்பதாகவும், அதற்காக அதிகாலையில் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு செல்வதற்காக தனது ஊரான ஒக்கநத்தம் கிராமத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சாலை ஓரத்தில் மயங்கி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிய வருகிறது. மேலும் இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இறந்து போனவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!