அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ப. சேகர் நியமிக்கப்பட்டார். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த புகழேந்தி காலமாகி விட்டதால் அந்த இடம் காலியாக இருந்தது. எனவே தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டித் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி் உள்ளது.