பெங்களூரு மருந்துகடையில் வேலை செய்து வந்த ரேணுகாசுவாமி என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனும் இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில், கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமி, தர்ஷனின் காதலிக்கு அடிக்கடி செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதனால் ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு நடிகர் தர்ஷன் தான் மூலகாரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தர்ஷன் குருசேத்ரா உள்பட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தர்ஷன், நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..
- by Authour
