Skip to content
Home » ‘காளி’ பட விவகாரம் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை….

‘காளி’ பட விவகாரம் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை….

லீனா மணிமேகலை படைப்பாக தயாராகிவரும் ‘காளி’ ஆவண படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையான நிலையில், இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை ‘காளி’ என்ற ஆவண படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து அந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது, அதற்கு காரணம் அந்த போஸ்டரில் இந்துகளின் தெய்வமாக கருதப்படும் காளி (வேடமிட்ட பெண்) வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியைப் பிடித்தவாறு இருந்ததுதான்.

photo

இந்த போஸ்டர் மத்ததை அவமரியாதை செய்வதாக இருப்பதாகவும், இதனால் இந்துகளின் மனம் புண்படுவதாகவும் கூரி பலர் கண்டம் தெரிவித்தனர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்   லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

photo

இதனால் பல்வேறு மாநிலங்களில் தன் மேல் பதியப்பட்ட வழக்கை எதிர்த்து இயக்குநர் லீனா மணிமேகலை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் லுக்கோ நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் லீனாவின் மனுவை ஏற்று, அவரது கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தவிட்டுள்ளது. மேலும் அவர் மேல் பதியப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் அந்தந்த மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!