Skip to content
Home » பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை?.. முழு விபரம்…

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த துறை?.. முழு விபரம்…

  • by Authour

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள். 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை இணைச்சர்கள். 36 பேர் இணை அமைச்சர்கள். இந்நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த அமைச்சரவையில் இடம்பெற்ற பலருக்கும் மீண்டும் அதே துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் விபரம்…

கேபினட் அமைச்சர்கள்

1 நரேந்திர மோடி பணியாளர் நலன், ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, பொதுமக்கள் குறை தீர்வு, அனைத்து கொள்கை முடிவுகள், மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள். –

2 ராஜ்நாத் சிங் -ராணுவம் –

3 அமித் ஷா- உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை

4 நிதின் கட்கரி- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை

5 நட்டா- சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரம்

6 சிவ்ராஜ் சிங் சவுகான் வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாடு

7 நிர்மலா சீதாராமன் நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள்

8 ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை

9 மனோகர் லால் கட்டார் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரம்; மின்சாரம்

10 குமாரசாமி கனரக தொழிற்சாலைகள், உருக்கு

11 பியுஷ் கோயல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை

12 தர்மேந்திர பிரதான் கல்வித் துறை

13 ஜிதன் ராம் மஞ்சி குறு, சிறு, நடுத்தர தொழில்துறை

14 லாலன் சிங் பஞ்சாயத்து ராஜ், மீன் வளம், கால்நடை மற்றும் பால்வளம்

15 சர்பானந்த சோனோவால் துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்து

16 வீரேந்திர குமார்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் –

17 ராம் மோகன் நாயுடு விமான போக்குவரத்து

18 பிரகலாத் ஜோஷி நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது வினியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-

19 ஜுவல் ஓரம் பழங்குடியினர் விவகாரத்துறை

20 கிரிராஜ் சிங் ஜவுளித்துறை

21 அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, செய்தி மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

22 ஜோதிராதித்ய சிந்தியா -தகவல்தொடர்பு, வடகிழக்கு பிராந்திய மேம்பாடு

23 பூபேந்திர யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்

24 கஜேந்திர சிங் ஷெகாவத் கலாசாரம், சுற்றுலா –

25 அன்னபூர்ணா தேவி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

26 கிரண் ரிஜிஜு பார்லிமென்ட் விவகாரம், சிறுபான்மையினர் விவகாரம்

27 ஹர்தீப் சிங் பூரி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

28 மன்சுக் மாண்டவியா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு –

29 கிஷன் ரெட்டி நிலக்கரி மற்றும் சுரங்கம்

30 சிராக் பஸ்வான் உணவு பதப்படுத்துதல்

31 சி.ஆர்.பாட்டீல் ஜல் சக்தி


தனி பொறுப்பு

1 ராவ் இந்திரஜித் சிங் புள்ளியியல் மற்றும் செயலாக்கம், திட்டம் (தனி பொறுப்பு)

கலாசாரம் (இணையமைச்சர்)

2 ஜிதேந்திர சிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனி பொறுப்பு)

பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி (இணையமைச்சர்)

3 அர்ஜுன் ராம் மேக்வால் – சட்டம் மற்றும் நீதி (தனி பொறுப்பு), பார்லிமென்ட் விவகாரங்கள் (இணையமைச்சர்)

4 பிரதாப் ராவ் ஜாதவ் ஆயுஷ் (தனி பொறுப்பு) சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் (இணையமைச்சர்)

5 ஜெயந்த் சவுதிரி திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் (தனிப்பொறுப்பு), கல்வி (இணையமைச்சர்)


இணை அமைச்சர்கள்

1 ஜிதின் பிரசாதா -வர்த்தகம் மற்றும் தொழில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

2 ஸ்ரீபாத் யசோ நாயக் மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-

3.பங்கஜ் சவுதிரி நிதி –

4.கிருஷண் பால் -கூட்டுறவு

5. ராம்தாஸ் அத்வாலே சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்

6. ராம்நாத் தாக்குர் வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்

7. நித்யானந்த் ராய் உள்துறை –

8. அனுப்ரியா படேல் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரம்

9.வி.சோமன்னா -ஜல் சக்தி மற்றும் ரயில்வே

10. சந்திரசேகர் பெமசானி ஊரக மேம்பாடு மற்றும் தகவல் தொடர்பு

11. எஸ்.பி.சிங் பகேல் பஞ்சாயத்து ராஜ், மீன் வளம், கால்நடை மற்றும் பால்வளம்

12.ஷோபா கரந்லாஜே -குறு, சிறு, நடுத்தர தொழில்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு

13.கீர்த்தி வர்தன் சிங் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், வெளியுறவு –

14. பி.எல்.வர்மா நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது வினியோகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

15. சாந்தனு தாக்குர் துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்து

16.சுரேஷ் கோபி சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

17.முருகன் செய்தி மற்றும் ஒலிபரப்பு, பார்லிமென்ட் விவகாரம்

18.அஜய் தம்டா சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்-

19. பந்தி சஞ்சய் குமார் – உள்துறை

20. கமலேஷ் பாஸ்வான் -ஊரக மேம்பாடு

21.பாகிரத் சவுத்ரி – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்

22. சதீஷ் சந்திர துபே -நிலக்கரி மற்றும் சுரங்கம்

23. சஞ்சய் சேத் -ராணுவம்

24. ரவ்னீத் சிங் உணவு பதப்படுத்துதல், ரயில்வே –

25.துர்கா தாஸ் உக்கே பழங்குடியினர் விவகாரம் –

26.ரக்ஷா நிகில் கட்சே இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு –

27.சுகந்த மஜும்தார் கல்வி, வடகிழக்கு பிராந்திய மேம்பாடு

28.சாவித்ரி தாக்குர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

29.தோகன் சாஹு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரம் –

30.ராஜ் பூஷண் சவுதிரி ஜல் சக்தி –

31. பூபதி ராஜு ஸ்ரீநிவாஸ் வர்மா கனரக தொழிற்சாலை, உருக்கு –

32. ஹர்ஷ் மல்ஹோத்ரா பெருநிறுவன விவகாரங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் –

33.நிமுபென் பாமனியா நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகம் –

34.முரளிதர் மொகுல் கூட்டுறவு, விமான போக்குவரத்து

35.ஜார்ஜ் குரியன் சிறுபான்மையினர் விவகாரங்கள், மீன் வளம், கால்நடை மற்றும் பால்வளம்

36. பவித்ரா மார்கரிட்டா வெளியுறவு, ஜவுளித்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *