Skip to content
Home » காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

  • by Senthil

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கோவிலான சிவகோடி குகைக் கோவிலுக்குச் செல்வதற்காக பஸ்சில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். பஸ் ரியாசி மாவட்டத்தில்  மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்வர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

https://www.dailythanthi.com/News/India/reasi-terror-attack-lg-announces-rs-10-lakh-ex-gratia-each-for-families-of-victims-1109346

https://www.dailythanthi.com/News/India/reasi-terror-attack-lg-announces-rs-10-lakh-ex-gratia-each-for-families-of-victims-1109346

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!