திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான 96வது தடகள போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இதில் 23 வயைான போட்டிகள் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். அரசு ஆதரவுடன் தமிழ்நாடு தடகள சங்கம் இந்த போட்டிகளை நடத்தி்யது போட்டிக்காக தடகள சங்கத்தினர் முக்கிய பிரமுகர்களிடம் நன்கொடையும் பெற்று இந்த போட்டியை நடத்துவது வழக்கம்.
இந்த போட்டி கடந்த வெள்ளிக்கிழமை திருச்சிஅண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. அமைச்சர் கே. என். நேரு இந்த போட்டியை தொடங்கி வைக்க வந்தார். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பிளக்ஸ் போர்டுகள் 50 அடிக்கு ஒன்று வீதம் வைக்கப்பட்டு இருந்தது. சி விஜயபாஸ்கர் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் இந்த பிளக்ஸ் வைக்கப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் போட்டியை தொடங்கி வைக்க வந்த அமைச்சர் நேருவுக்கு ஒரு பிளக்ஸ் கூட வைக்கப்படவில்லை. இதை பார்த்த அமைச்சர் நேரு டென்ஷன் ஆனார். இது குறித்து மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகனிடம் கேட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சருக்கு இத்தனை பிளக்ஸ் வைக்கப்பட்டது எப்படி என கேட்டு உள்ளார். போட்டியை தொடங்கி வைக்க வரும் எனக்கு கூட ஒரு பிளக்ஸ் இல்லை. அதிமுக காரருக்கு பிளக்ஸ் வைத்திருக்கிறீர்கள் என கடிந்து கொண்டார். அதற்கு விளையாட்டு அதிகாரி் அவர் இந்த போட்டிக்கு நன்கொடை வழங்கி உள்ளார். அவரே பிளக்ஸ் வைத்து விட்டார். இதுபற்றி என்னிடம் அவர் எதுவும் கேட்கவில்லை என்று பதில் கூறி உள்ளார்.
அதைத்தொடர்ந்து விஜயபாஸ்கர் பிளக்ஸ் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டது. சில பிளக்ஸ் மறைத்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அதிமுக அமைச்சரின் பிளக்ஸ் வைக்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட வி்ளையாட்டு அதிகாரி இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.