டி20 உலகக் கோப்பை தொடரின் 19-வது லீக் போட்டி இன்று நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மழையால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராத் கோஹ்லி 4 ரன்னிலும் ரோஹித் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அக்ஷர் பட்டேல்(20) சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். ஷிவம் துபே 3 ரன்களில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ரிஷப் பந்த் 42 ரன்களில் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா 7 ரன்னில் அவுட் ஆனார். பும்ரா டக் அவுட் ஆனார். அர்ஷ்தீப் சிங் 9 ரன்களில் அவுட் ஆக இந்திய அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா, ஹரிஸ் ராப் தலா 3 விக்கெட்டுகளையும் முகம்மத் அமிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில் இந்திய அணி,பாகிஸ்தான் அணிக்கு 120 ரன்கள் நிர்ணயித்தது. 120 ரன்கள் என்ற எளிய இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை இந்திய அணியிடம் பறிகொடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகம்மது ரிஸ்வான் அதிகபட்சமாக 31 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.இந்திய அணியின் பும்ரா அற்புதமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுளை வீழ்த்தினார். அக்ஷர் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒருவிக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை கட்டுப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.