பிரதமராக மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சி நேற்று கூறியிருந்தது. நேற்று இரவு பா.ஜ., தலைவர் பிரஹலாத் ஜோஷி, கார்கேயை தொடர்பு கொண்டு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, விழாவில் கலந்து கொள்வது குறித்து கட்சி மூத்த தலைவர்களுடன் கார்கே ஆலோசனை மேற்கொண்டார். இண்டியா கூட்டணி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் மோடி பதவியேற்பு விழாவில் கார்கே கலந்து கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.