Skip to content
Home » லோக்சபா திமுக தலைவர் கனிமொழி..?

லோக்சபா திமுக தலைவர் கனிமொழி..?

லோக்சபா தி.மு.க., தலைவரை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக திமுக எம்.பி.,க்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை 6.30க்கு நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டின் லோக்சபா தி.மு.க., தலைவராக டி.ஆர்.பாலு, துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக பழனிமாணிக்கம், கொறடாவாக ஆ.ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முறை கனிமொழிக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம் தற்போது, டி.ஆர்.பாலு கட்சியின் பொருளாளராக உள்ளார். மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பான அறிவிப்பபை வெளியிட வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும், ‘டிபாசிட்’ இழக்க செய்தார் என்பது குறிப்பிடதக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!