கோவையில் நேற்று நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‛‛அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையே காரணம் என்றும் கூட்டணி முறியாமல் இருந்து இருந்தால் 30 முதல் 35 இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் ” என கூறியிருந்தார். இது தொடர்பாக ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை குறித்த வேலுமணியின் கருத்து, அவரின் சொந்த கருத்து. அ.தி.மு.க.,வின் கருத்து அல்ல. அனுமானத்தின் அடிப்படையில் அவர் பேசி உள்ளார். இப்போது மட்டும் அல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என்பதே அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. தண்ணீரும், இலையும் எப்போதும் ஒட்டாது. எங்களது தலைவர்களை விமர்சனம் செய்தவர்களை தான் நாங்கள் விமர்சனம் செய்தோம். அண்ணாமலை இலவு காத்த கிளி போல் காத்து கொண்டிருக்க வேண்டியது தான். பா.ஜ.,வால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றார். அதே சமயம் எஸ்பி வேலுமணி கூறியது குறித்து பதி்ல் அளித்த அண்ணாமலை.. வேலுமணிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏதோ கருத்துவேறுபாடு இருப்பது போல் தெரிகிறது என கூறியிருந்தார்.
அது அதிமுக கருத்தல்ல.. வேலுமணியை அசிங்கப்படுத்திய ஜெயக்குமார்..
- by Authour