பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி கீதா. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று மாலை தனது அம்மா வீட்டிற்கு செல்ல இருசக்கர பேட்டரி வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மாட்டு சந்தை அருகே உள்ள இரட்டை கண் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே கீதா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொள்ளாச்சி பகுதியில் பெண் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.