நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா செலுக்காடி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் காலை 8 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் நுழைந்தன. அந்த காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதியிலுள்ள சாலைகளில் நீண்ட நேரம் நடமாடின.
பின்னர் சாலைகளில் நடமாடிய யானைகளைப் பாா்த்து ஒரு வீட்டிலிருந்த வளா்ப்பு நாய் குரைத்தது. இதனால் நாயை துரத்திக் கொண்டு யானைகள் ஓடி வந்தன. இதனைப் பாா்த்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அலறியடித்து ஓடினர். மேலும் தேவன் என்பவரது வீட்டை யானைகள் சேதப்படுத்தின. இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் சத்தம் போட்டனர் இதனால் வந்த வழியே யானைகள் திரும்பின.
இது குறித்து உடனே வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.