Skip to content
Home » தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது

தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதி (அதாவது இன்று) வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த சோதனைகளில் சுமார்  1,500 கோடி மதிப்புள்ள  பணம், விலை உயர்ந்த பொருட்கள், நகைகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தியா முழுவதும் 7 கட்டத் தேர்தல் முடிந்து 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் முடிந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவோடு தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுகின்றன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *