நாடு முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினம் அனுசரித்து வரும் நிலையில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வனத்துறை சார்பில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அத்தி நாவல். மகிழம்.ஆவி.மந்தாரை. ஆல் போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது.
மரக்ன்றுகள் நடுவிழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.
உடன் மகளிர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல்.
குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழில். மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார் (பொறுப்பு);மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு மற்றும்
வனத்துறை கரூர் சரக ரேஞ்சர் ,தண்டபாணி, தாதம்பாளையம் ரேஞ்சர் சிவா,வனத்துறை அலுவலர்கள் நீதிமன்ற அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.