பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒருங்கிணைநது, 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் தேர்வு செய்ய முகாம், துறையூர் சாலையில் உள்ள பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. முகாமினை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ பரிசோதனையை பார்வையிட்டார்.
இம்முகாம்களில் சிறப்பு மருத்துவர்களான கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், , உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலம் அறுவை சிகிச்சைக்கும் மாற்றுத்திறனாளி பயனாளிகளை தேர்வு செய்தனர், இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள், சண்முகசுந்தரம், அண்ணாதுரை,குழந்தை ராஜன், உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்சியில் காலை 9 மணிக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மருத்துவ முகாமிற்க்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் மருத்துவர்கள் வராததால், நிகழ்ச்சி துவங்கிய நேரம் பகல்11:30 மணி வரை சுமார் இரண்டரை மணி நேரம் காத்திருதனர் என்பது குறிப்பிடத்தக்கது.