இந்தியா முழுவதும் கடந்த மே 5ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்தது. 571 நகரங்களில்நடந்த இந்த தேர்வை 23 லட்சத்து33,297 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தாண்டு ஒரு லட்சத்து52,920 பேர் தேர்வு எழுதியதில் 89,426 (58.47%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்வுஎழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2023-ல் 1,44,514பேர் தேர்வு எழுதியதில் 78,693 (54.45%) பேர் தேர்ச்சிபெற்றனர்.
நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சையது ஆரிபின் யூசுப், எஸ்.சைலஜா, ஆதித்யா குமார் பண்டா,பி.ஸ்ரீராம், பி.ராஜநீஷ், எம்.ஜெயதி பூர்வஜா, ஆர்.ரோகித், எஸ்.சபரீசன்ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ள னர். இதுதவிர ஓபிசி -6 லட்சத்து 18,890 பேரும், எஸ்சி – ஒரு லட்சத்து78,738 பேரும், எஸ்டி -68,479 பேரும்,பொதுப்பிரிவு (யுஆர்)-3 லட்சத்து 33,932 பேரும், இடபிள்யூஎஸ் -ஒருலட்சத்து 16,229 பேரும் இடம் பிடித்துள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் 4,120 பேரும் மருத்து வம் படிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.