தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 8 ரவுண்ட்கள் வரை இந்த நிலை நீடித்தது. 9வது சுற்று எண்ணப்பட்டபோது அவர் பின்தங்கினார். திமுக வேட்பாளர் மணி முன்னிலை பெற்றார்.
அதே நேரத்தில் 8 ரவுண்ட்கள் வரை விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அதாவது 490 ஓட்டுகள் கூடுதலாக பெற்றிருந்தார். அடுத்த ரவுண்டில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை பெற்றார். அதற்கு அடுத்த ரவுண்டில் தேமுதிக வேட்பாளர் விஜயபி்ரபாகரன் 32 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னணிக்கு வந்தார். இதனால் விருதுநகர் ஒட்டு எண்ணிக்கை ஒவ்வொரு ரவுண்டும் விறுவிறுப்பை கூட்டியது.