திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் அம்பேத்கர் விடுதி உள்ளது இவ் விடுதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் கீழ் செயல்படுகிறது விடுதியில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்க கூடிய வெளி மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் மாணவர்களை தங்க வைக்கப்பட்டுள்ள கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்தது. மேலும் கட்டிடம்
இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதில் மாணவர்களை தங்க வைப்பதால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு அம்பேத்கர் விடுதியில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்கி படிப்பதை உத்தரவாத படுத்த வேண்டும் இந்த கல்வி ஆண்டு மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்பதற்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள பயன்பாடு அற்று கிடக்கும் இளைஞர் விடுதியில் தங்குவதற்கான அனுமதி அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்வதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தது.