ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். அவர் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்தார். அதாவது 24 வருடம் 91 நாட்கள் அவர் முதல்வராக இருந்த நிலையில் சட்டசபை தேர்தலை சந்தித்தார். இந்த நி்லையில் இப்போது நடந்துள்ள தேர்தலில் பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழக்கும் நிலைக்கு வந்து உள்ளது. ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் பிஜு ஜனதா தளம் 67 தொகுதிகளிலேயே முன்னணியில் உள்ளது. எனவே ஒடிசாவில் பிஜூ ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இந்தியாவிலேயே அதிக காலம் தொடர்ந்து முதல்வராக இருந்தவர் என்ற சாதனை நிகழ்த்திய பிஜூஜனதா தள கட்சித்தலைவர் நவீன் பட்நாயக் இப்போது தோல்வியை சந்தித்து உள்ளார். அங்கு முதன் முதலாக பாஜக ஆட்சி அமைக்கப்போகிறது.