டில்லியில் 7 மக்களவை தொகுதி உள்ளது. இங்கு கடந்த முறை 7 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றிருந்தது. அதுபோல இப்போதும் இங்கு 7 தொகுதிகளிலும் பாஜகவே முன்னணியில் உள்ளது. இதனால் மீண்டும் 7 தொகுதிகளையும் பாஜகவே வெற்றி பெறும் என அந்த கட்சித் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த முறை டில்லியில் காங்கிரசும், ஆம்ஆத்மியும் கூட்டணி வைத்து போட்டியிட்டும் அங்கு வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.