கரூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் பணி கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் காலையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தபால் வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக கட்சி பூத் ஏஜெண்டுகள் அமர்ந்திருந்த நிலையில், திமுக பூத் ஏஜெண்டுகள் தங்களுக்கு சேர் கொடுக்கவில்லை, மேலும் அவர்கள்தான் முன்னால் அமர்ந்திருக்கின்றனர் என்று கூறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக நீடித்த இந்த வாக்குவாதத்தை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான தங்கவேல் மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அமர வைத்தனர் . இந்த சம்பவத்தால் தபால் ஓட்டு எண்ணுவதில் 30 நிமிடம் தாமதம் ஆனது.