பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண்நேரு போட்டியிட்டார். இவர் முதல் 3 சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டபோது38 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன்2 ம் இடத்திலும், பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் 3ம் இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து அருண் நேரு அதிக வாக்குகள் வாங்கியபடி இருந்தார். எனவே அருண் நேரு 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என கணிக்கப்படுகிறது.