Skip to content
Home » தஞ்சை… கலைஞர் 101வது பிறந்த நாள் விழா…

தஞ்சை… கலைஞர் 101வது பிறந்த நாள் விழா…

முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி தஞ்சை மாவட்ட, மாநகர திமுக சார்பில், ரயில் நிலையம் அருகில் இருந்து சாரட் வண்டியில் கலைஞர் போல் வேடமணிந்தவரை அமரச் செய்து பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தஞ்சை மாவட்ட மாநகர திமுக சார்பில் ரயில் நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் கலைஞர் போல் வேடம் அணிந்தவர் முரசொலி பத்திரிகை படித்துக் கொண்டிருப்பது போல் அமரவைத்து சாரட் வண்டிக்கு முன்பாக இளைஞர்கள் குதிரையில் அமர்ந்து கட்சிக்கொடியை கையேந்தி படைவீரர்கள் போல் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் ரயிலடி பகுதியில் தொடங்கி தலைமை தபால் அலுவலகம் வழியாக அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர். பின்னர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை எம்பி எஸ் எஸ் பழனிமாணிக்கம், மாநகர செயலாளரும், மேயருமான சண்.இராமநாதன், தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முரசொலி, மாநில மருத்துவ அணி செயலாளரும், மாநகராட்சி துணை மேருமான அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மேத்தா, நீலகண்டன், புண்ணியமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!