தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்லப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பயணம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி(சித்திரை 1) திருச்செந்தூரில் இருந்து தொடங்குகிறார். கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக. செயற்குழு கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராமர் பாலத்திற்கு சேதம் வராமல் சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பது உள்பட 9 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.