இந்தியா முழுவதும் நாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த நிலையில் நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என 1ம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். இதற்கு போட்டியாக பாஜகவும் நேற்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். இந்திய வரலாற்றில் இதுவரை தேர்தல் ஆணையம் மீது இப்போது போல விமர்சனங்கள் எழுந்ததில்லை.
இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தேர்தல் வரலாற்றில், தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது என்பது இதுவே முதல் முறையாகும்.
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவருடைய சமூக ஊடக தளத்தின் வழியே நேற்று வெளியிட்ட செய்தியொன்றில், ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன், 150 மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே பேசினார் என தெரிவித்து இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.
இதுபற்றி நேற்று மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி, அவரிடம் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இதுபற்றிய உண்மையான தகவல் மற்றும் விவரங்களையும் கேட்டிருந்தது.இந்த சூழலில், தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையம் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.