திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என கூறப்படுகிறது எனவே 3வது முறை மோடி ஆட்சிக்கு வருவார் என்பது அன்றே தெரியும் என்றார். தமிழ்நாட்டில் 4 ம்தேதி எல்லாம் தெரிந்து விடும். அதன் பிறகு உண்மை என்ன என்று மக்களுக்கு தெரியும் என்று கூறினார். மேலும் அம்மாவின் தொண்டர்களை எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டுவது தான் என்னுடைய நம்பிக்கை என்றார். மேலும் ஓபிஎஸ் அணியில் கருத்து மாறுபாடு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு 4ம் தேதிக்கு பிறகு எல்லாம் தெரியும் என தெரிவித்தார்.
3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்… திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/ttv-930x620.jpg)