Skip to content
Home » கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

கோவை… திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியினர் மனு…

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து  மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன் சாட்டை என்ற பெயரில் youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் வளர்ச்சியையும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக.,வை சேர்ந்த திருச்சி சூர்யா சமூக வலைதளத்தில் சாட்டை துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பி வருகிறார். அவரை கண்டிக்காமல் மாநில தலைவர் அண்ணாமலை ஊக்கப்படுத்தி வருகிறார். எனவே திருச்சி சூர்யா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறயிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!